undefined

அடுத்தடுத்து 6 விமானங்கள் ரத்து... பயணிகள் கடும் அவதி!

 


தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென மழை பெய்து வருகிறது. இதனையடுத்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டன், அந்தமான்,பெங்களூரு உட்பட பல ஊர்கள், நாடுகளுக்குச் செல்ல வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி 6 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் லண்டன், அந்தமான், பெங்களூரு 6 விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. லண்டன் செல்வதற்காக 284 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு முன்னராகவே வந்து காத்துக் கிடந்தனர்.  முன்னறிவிப்பின்றி விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகினர். 


வழக்கமாக லண்டனில் இருந்து சென்னை வந்து மீண்டும் அதே விமானம் அதிகாலை 3:30 மணிக்கு லண்டன் புறப்படும். இதனை ஒட்டி 284 பயணிகள் என்று அதிகாலை 2:30 மணிக்கு முன்னதாகவே லண்டன் செல்வதற்காக வந்து சென்னை விமான நிலையத்தில் காத்துக் கிடந்த நிலையில்  திடீரென விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை