undefined

அதிர்ச்சி வீடியோ... பீஸ் கட்டாததால் கொளுத்தும் வெயிலில் தண்டிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்!

 

உத்தரப் பிரதேச மாநிலத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வரும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கட்டணத்தைக் கட்டாமல் நிலுவையில் வைத்திருந்ததால், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை கொளுத்தும் வெயிலில் உட்கார வைத்து தண்டிக்க சொல்லி அப்பள்ளியின் முதல்வர்  உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வெளியான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 


உத்தரப் பிரதேச மாநிலம், சித்தார்த்நகரில் அமைந்துள்ள ஷியாம்ராஜி உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் பலர் பள்ளிக் கட்டணம் கட்டாமல் நிலுவையில் வைத்திருந்ததால், அவர்களை வெயிலில் அமர வைத்து தண்டனை அளித்திருக்கிறார் அப்பள்ளியின் முதல்வர்.

இந்த வீடியோ வைரலான நிலையில், மாவட்ட ஆய்வாளரின் கவனத்திற்கு சென்ற நிலையில், இது குறித்து தெரிவித்த அவர், " இப்படி செய்வது மிகவும் வெட்கக்கேடானது. இது குறித்த தகுந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

இது குறித்து பள்ளியின் முதல்வர் ஷைலேஷ் குமார் பேசுகையில், " பள்ளிக் கட்டணத்தை கட்டாததால் அதை கட்டும்படி பெற்றோரை கண்டிக்கும் வகையிலும், எதிர்காலத்தில் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்கத்தான் இதை செய்தேன்” என்று எந்தவிதமான குற்றவுணர்ச்சியும் இல்லாமல் தனது செயல் குறித்து விளக்கமளித்தார்.

மேலும் பேசுகையில், “ஒரு மாணவருக்கு ரூ.10,000 முதல் லட்சங்கள் வரை கட்டணம் நிலுவையில் இருந்ததால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், வங்கியின் அழுத்தம் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியால் எனக்கு இதை தவிர வேறு வழியில்லாமல் போனது" என்றார். பள்ளி முதல்வரின் இந்த செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!