undefined

 மீனவர்களே கடலுக்குள் மீன்பிடிக்க போகாதீங்க... மீன்வளத்துறை எச்சரிக்கை!

 


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்று இரவு முதல் டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்  ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.


இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதால் பலத்த காற்று வீசக்கூடும் . இதனையடுத்து  விசைப்படகுகளை ஒன்றுக்கொன்று இடைவெளிவிட்டு நங்கூரமிட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் தங்களது நாட்டுப்படகுகளை பாதுகாப்பாக கடற்கரையில் நிறுத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!