undefined

மீன்கள் விலை அதிரடியாக குறைந்தது... பொதுமக்கள் மகிழ்ச்சி!

 

இன்று ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி திரேஸ்புரத்தில் மீன்கள் விலை அதிரடியாக குறைந்து காணப்பட்டதால் வியாபாரிகள், பொதுமக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் நேற்று அதிகாலையில் கரைக்கு திரும்பினர். இவர்கள் பிடித்து வந்த மீன்களை வாங்க திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று காலை முதலே பொதுமக்களும், வியாபாரிகளும் குவியத் தொடங்கினர்.

கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக சீலா மீன், ஊளி, விளை, பாறை, சூரை போன்ற மீன்களின் வரத்து சுமாராகவே காணப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தோல் பாறை மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. இந்த மீன் கிலோ ரூ.250 வரை விற்பனையானது. இதை ஏராளமான மீன் ஏற்றுமதியாளர்கள் வாங்கிச் சென்றனர்.

அதுபோல் சாளை மீன்களின் விலை குறைந்து காணப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன் 1 கூடை ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனையான சாளை மீன் நேற்று 1 கூடை ரூ.1,500-க்கு விற்பனையானது.

மேலும் சீலா மீன் கிலோ ரூ.1,000 வரையும், விளை மீன் ரூ.350 முதல் ரூ.400 வரையும், ஊளிமீன் ரூ.400 வரையும், பாறை மீன் ரூ.300 முதல் ரூ.350 வரையும், கனவா மீன் ரூ.350 வரையும், குருவளை, தம்பா, பண்டாரி ஆகிய மீன்கள் ரூ.300 வரையும், நெத்திலி 1 கூடை ரூ.1,700 வரையும், மத்திக்குண்டான் மீன் கூடை ரூ.800 வரையும் விற்பனை செய்யப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்றும் மீன்களின் விலை குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் போட்டிப்போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா