குடியிருப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூடு ... 2 பேர் பலி... 19 பேர் படுகாயம்... அமெரிக்காவில் தொடரும் சோகம்!
அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்த இந்த தாக்குதலில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்ததனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வெளியிட்ட அறிக்கையில், “இந்த நேரத்தில் புலனாய்வாளர்கள் மற்றும் தடவியல் பணியாளர்கள் கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களையும் பகுப்பாய்வு செய்து வருகின்றனர். மேலும் வார இறுதி வரை தங்கள் வேலையைத் தொடருவார்கள்” என தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் கென்டக்கி மாகாணத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான நிலையில், மிச்சிகனில் அரங்கேறியுள்ள இந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!