undefined

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. லட்சக்கணக்கிலான பொருட்கள், இயந்திரங்கள் எரிந்து நாசம்!

 

திருப்பூரில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் ஒன்றில் இன்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. சுமார் 8 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருப்பூர் ஆண்டிபாளையம் - இடுவம்பாளையம் சாலையில்  செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த பனியன் துணிகள், நூல் கட்டுகள் உள்ளிட்டவை மள, மளவென தீப்பிடித்து எரிய துவங்கியது. பனியன் நிறுவனம் என்பதால் அதிகளவில் துணிகளும், நூல்களும் இருந்த நிலையில் தீ வேகமாக பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.

அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் உடனடியாக இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக போராடிய இன்று காலை தீயை முற்றாக அணைத்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக திருப்பூர் மத்திய போலீசார் விசாரித்து வரும் நிலையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தில் பல லட்சக்கணக்கான மதிப்பிலான பின்னலாடை பொருட்கள், இயந்திரங்கள் தீயில் முழுவதுமாக எரிந்து சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை