காப்புக்காடு வனத்தில் பயங்கர தீ விபத்து.. பல அரிய வகை மரங்கள் தீயில் கருகி நாசம்!

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி செல்லும் சாலையில் காப்புக்காடு உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கார்மாங்குடி காப்புக்காட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயில் பல ஏக்கர் மரங்கள் எரிந்து நாசமானது . இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்று இரவு 8 மணியளவில் தீயை அணைத்தனர்.

பல ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த அரிய வகை மரங்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இந்த விபத்து குறித்து வனத்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

மேலும் விருத்தாசலம் அருகே பாலக்கரையில் மணிமுக்தாறு பாலத்தின் அடியில் கிடந்த குப்பையில் நேற்று திடீரென தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது. தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மங்கலம்பேட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்