2 மாத கைக்குழந்தையுடன் 7வது மாடியில் இருந்து குதித்த தம்பதியர்... சம்பவ இடத்திலேயே 3 பேரும் மரணம்!
பிரேசலில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், தீ விபத்தில் இருந்து உயிர் பிழைத்து தப்பிப்பதற்காக 2 மாத கைகுழந்தையுடன் 7வது மாடியிலிருந்து குதித்த தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 7வது மாடியில் அமைந்திருந்த ஒரு வீட்டில் வசித்து வந்த தம்பதியர் லூயிஸ் எவால்டோ லிமா (28) - கிரேசியன் ரோசா டி ஒலிவேரா (35). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இவர்கள் வசித்து வந்த குடியிருப்பில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தீயின் உக்கிரம் அதிகரிக்கவே, ஜன்னல் வழியாக கீழே குதிக்க அந்த தம்பதியர் முடிவு செய்துள்ளார்கள். கீழே நின்றவர்கள் குதிக்க வேண்டாம் என சத்தமிட, அதற்குள் தீ வேகமாக பரவ, தங்கள் 2 மாதக் குழந்தை லியோ ஒலிவேரா டி லிமாவை கட்டியணைத்தபடி அந்த தம்பதியர் 7வது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்கள்.
ஏழாவது மாடியில் இருந்து கீழே விழுந்த வேகத்தில் மூன்று பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள்.
தம்பதியரின் மூத்த குழந்தை, 7 வயது மகள் அன்றைய தினம் வீட்டில் இருக்காமல் தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பள்ளிக்குச் சென்றிருந்ததால் அவள் இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்துள்ளாள். அந்தச் சிறுமி தற்போது தன் தாத்தா பாட்டி வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறாள். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் துயரத்தையும் உருவாக்கியுள்ள நிலையில், போலீசார் இது தொடர்பாக தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா