undefined

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தீ விபத்து.. 400 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகமங்கலம் பகுதியில் 500 ஏக்கர் பரப்பளவில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த செல்போன் உதிரி பாகங்கள் தொழிற்சாலையில் 20,000 தொழிலாளர்கள் 24 மணி நேரமும் பணிபுரிகின்றனர். இந்நிலையில், ஆலையின் பிரதான அலகில் சனிக்கிழமை காலை திடீரென தீப்பிடித்து வேகமாக பரவியது.

தொழிற்சாலையில் தீயணைப்பு வாகனத்துடன், பெங்களூரு, ஓசூர், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, 12 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 6 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களை மாவட்ட ஆட்சியர் சரயு நேரில் சந்தித்து நலம் விசாரித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார்.

பின்னர் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலைக்கு சென்று விசாரணை நடத்தினார். இந்த தீ விபத்தில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. ரசாயன தொட்டி அமைந்துள்ள பகுதியில் அதிக வெப்பம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ரசாயன தொட்டி வெடித்து மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தீ விபத்து ஏற்பட்ட போது குறித்த பிரிவில் பணிபுரிந்த 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!