ஹோலி கொண்டாட்டத்தில் சோகம்... கோவிலில் பயங்கரத் தீவிபத்து.. தலைமை அர்ச்சகர் உட்பட 14 பேர் மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சி வீடியோ!
மத்திய பிரதேச மாநிலத்தில் உஜ்ஜைன் நகரில் மகாகாளேஸ்வரர் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. இந்தக் கோவிலில் இன்று காலை கருவறையில் சாமிக்கு வழக்கம் போல் பூஜைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இன்று ஹோலி பண்டிகை என்பதால் வழக்கத்தை காட்டிலும் திரளான பக்தர்கள் கோவிலில் அதிகாலை முதலே குவிந்திருந்தனர்.
பஸ்ம ஆரத்தி நடந்து கொண்டிருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், கோவில் பூசாரி மற்றும் பணியாளர்கள் என 14 பேர் வரை படுகாயம் அடைந்தனர். இந்த தீவிபத்தில் பஸ்ம ஆரத்தியில் ஈடுபட்டு இருந்த தலைமை பூசாரியான சஞ்சய் குருவும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் உஜ்ஜைன் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கொகொண்டாடப்பட்டு வரும் நிலையில் வண்ண பொடிகள் தூவும் நிகழ்ச்சியில் தீப்பற்றிக் கொண்டதாக இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். இது குறித்த தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.