நிதி மோசடி.. இலங்கையில் சிக்கிய இந்தியர்கள்.. 60 பேரை கைது செய்தது குற்றப் புலனாய்வுப் பிரிவு!

 

ஆன்லைன் நிதி மோசடியில் ஈடுபட்டதாக 60 இந்தியர்கள் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பின் புறநகர்ப் பகுதிகளான மடிவெல, பத்தரமுல்லை மற்றும் மேற்கு கரையோர நகரமான நெகொம்போவில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை தொடர்பாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா கூறுகையில், இந்த பகுதிகளில் குற்றப் புலனாய் பிரிவுணர் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில் 135 செல்போன்கள் மற்றும் 57 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டன.

வாட்ஸ்அப் குழுவொன்றில் சமூக ஊடகத் தொடர்புகளுக்காக பணம் விளம்பரப்படுத்தியதில் பாதிக்கப்பட்ட ஒருவர் செய்த புகாரைத் தொடர்ந்து கைது நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.மேலும் விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்பத்தில் சிறிய தொகையே வழங்கப்படுகிறது. பின்னர், அவர்கள் பணத்தை டெபாசிட் செய்ய கட்டாயப்படுத்திய திட்டம் தெரியவந்தது.

பெர்டேனியாவில் மோசடி செய்பவர்களுக்கு உதவியதாக தந்தையும் மகனும் ஒப்புக்கொண்டதாக 'டெய்லி மிரர் லங்கா' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.நெகொம்போவில் உள்ள சொகுசு வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது கிடைத்த முக்கிய ஆவணங்களைத் தொடர்ந்து சந்தேகநபர்கள் 13 பேர் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட நடவடிக்கையில் மேலும் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

துபாய் மற்றும் ஆப்கானிஸ்தானில் சர்வதேச தொடர்புகள் இருப்பதும் தெரியவந்தது. இவர்கள் நிதி மோசடி, சட்டவிரோத பந்தயம் மற்றும் பல்வேறு சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!