undefined

பெரும் சோகம்... மர்மக் காய்ச்சலால் இளம்பெண் பரிதாப பலி...!!

 

 சென்னை மேட்டூர் பகுதியில் வசித்து வருபவர் மோகன் .  இவர் கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கலையரசி.  இவர் தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு   ஒரு மகள், மகன் உள்ளனர். இதில் கலையரசி கடந்த 4 நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  கடந்த  2 நாட்களுக்கு முன்   கலையரசிக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் நரம்பு தொடர்பான மர்ம காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.  உடல் நிலை மோசமானதையடுத்து   கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


 அங்கு இரவு  மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.  கலையரசி மகன் ஸ்ரீதரும்   கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் ஆவடி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது ரத்த மாதிரியை பரிசோதித்த தனியார் மருத்துவமனை, அவருக்கு டெங்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த நிலையில், அவருக்கு மர்ம காய்ச்சலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கலையரசி இறப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம், கலையரசியை உள்நோயாளியாக அனுமதித்து, தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என கூறியுள்ளது. அதற்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதேபோல, தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெறும் நோயாளிகள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தினாலும் சில மருத்துவமனை அதை பின்பற்றுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து, ஆவடி மாநகர நல அலுவலர் மரு.ம.யாழினி கூறுகையில், “தொடர் மர்ம காய்ச்சல் எதிரொலியாக, ஆவடி மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்படி, தனியார் மருத்துவமனைகளுக்கான கலந்தாலோசனை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதில், காய்ச்சலின் போது அவர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படும்” என்றார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!