கார்த்திகை மாத பண்டிகைகள்... வழிபாடுகள்... பலன்கள்
கார்த்திகை மாதத்தில் சிவபெருமானுக்கு நெய் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட குடும்பத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடும். கார்த்திகை மாதத்தில் தினமும் சூரிய உதயத்தில் நீராடி கடவுளை வழிபடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடையலாம் என்பது ஆன்மிக அன்பர்கள் வாக்கு.
இந்த மாதத்தில் விஷ்ணுவை துளசியால் அர்ச்சிப்பவர்கள் அசுவமேதயாகம் செய்த பலனை அடைவர். மது, மாமிசம் ஒழித்து விரதம் அனுஷ்டிப்பவர் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுவர். முருகனுக்கு உகந்த நட்சத்திரங்கள் விசாகம் , கார்த்திகை. கார்த்திகைத் தீபத் திருநாளில் தீபங்கள் ஏற்றி முருகனை வழிபடுவதால் வாழ்வில் மேன்மை அடையலாம். கார்த்திகை மாத பௌர்ணமியில் பூமிக்கு மிக அருகில் சந்திரன் வருவதால் பூமிக்கு மிக அருகே வந்து இறைவனும் இறைவியும் அருள்பாலிப்பதால் வீடுகள் தோறும் விளக்கேற்றி வைக்கிறோம். கார்த்திகை பௌர்ணமியில் தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் திருவண்ணாமலையில் கிரிவலம் வருவதால் அந்த நாளில் நாமும் மலை வலம் வருவது கூடுதல் சிறப்பு.
கார்த்திகையில் சோமவாரங்களில் சிவ ஆலயங்களில் சங்காபிஷேகம் நடத்தப்படும். இந்த நாட்களில் நாம் செய்யும் தானம் பலமடங்கு புண்ணியங்களை கொண்டு வந்து சேர்க்கும். கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி அடையலாம்.
இந்த மாதத்தில் ஆலய சுத்தம் செய்தால் மன அமைதி கிட்டும். கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களிலும், அதிகாலையில் நீராடி, சிவ- விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்தால் குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என்கின்றன நமது புராணங்கள். கார்த்திகையில் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தின் இயக்கம் சீராக இருக்கும்.இதனால் தான் ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு கார்த்திகை மாதத்தில் விரதம் இருப்பர். இந்த மாதத்தில் தான் மெய்ப்பொருள் நாயனார், ஆனாய நாயனார், மூர்க்க நாயனார், சிறப்புலி நாயனார், கணம்புல்ல நாயனார் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை நடைபெறுகிறது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!