undefined

 வலுக்கும் கனமழை... 6 சுரங்கப்பாதைகள் மூடல்.... தத்தளிக்கும் தலைநகர்!

 


சென்னையில் ஃபென்ஜால் புயல் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வரும் நிலையில் இந்த புயல் தற்போது புதுச்சேரிக்கு கிழக்கே 150 கி.மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் தங்களது கார்களை வேளச்சேரி மேம்பாலத்தில் நிறுத்தி வருகின்றனர்.
வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நவம்பர் 29ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது.

இந்த புயலானது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 1ம் தேதி நாளை காலை கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.  இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,ராணிப்பேட்டை  மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் பெய்து வரும் கனமழை மழை காரணமாக,மெரீனா, பெசன்ட் நகர் கடற்கரைகள்   வெறிச்சோடி கிடக்கின்றன.  புயல் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய 18 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  சனிக்கிழமை மாலை 5 மணி வரை எந்த விமானமும் இயக்கப்படாது என விமான நிலைய ஆணையக் குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


அதே போல் சென்னையில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்கள் சேவையையும் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. புயல் இன்று இரவு அல்லது நாளை காலைதான் கரையைக் கடக்கும் என வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், சென்னையில் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் 9 சுரங்கப்பாதைகள் தவிர மற்ற சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கவில்லை என மாநகராட்சி அறிவித்துள்ளது.
மேலும் மழைநீர் தேங்கியுள்ள கெங்கு ரெட்டி, ரங்கராஜபுரம் - வீலர், பழவந்தாங்கல், ஆர்பிஐ சுரங்கப்பாதை, பெரம்பூர் அஜாக்ஸ் ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளதால் சுரங்கப்பாதையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதியடைந்துள்ளனர்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!