undefined

 பிரபல இயக்குநர் மீது பெண் கதாசிரியர் புகார்... 'ஹோட்டல் அறையில் கொடூரம்... வெளியே சொல்லாமல் இருக்க ரூ.10,000 கொடுத்தார்'!

 
 


மலையாள திரையுலகில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லைகள் குறித்த அம்பலங்கள் தொடர்கின்றன. இந்நிலையில், பிரபல இயக்குனர் விகே பிரகாஷ் மீது இளம்பெண் கதாசிரியர் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். தனது கதையைக் கேட்பதாகக் கூறி கொல்லத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு தன்னை அழைத்த பிறகு, இயக்குநர் வி.கே.பிரகாஷ் தன்னைப் பிடித்து இழுத்ததாக புகார் தெரிவித்துள்ளார். தனது தொடர்ந்த எதிர்ப்பின் பின்னர், இந்த பலாத்கார முயற்சி குறித்து வெளியில் தெரியாமல் இருக்க, வி.கே.பிரகாஷ் தனது கணக்கில் ஓட்டுநர் மூலம் ரூ.10,000 செலுத்தியதாக புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் ஆதாரங்களுடன் டிஜிபியிடம் பெண் கதாசிரியர் புகார் அளித்துள்ளார்.

வி.கே.பிரகாஷுக்கு எதிரான பெண் கதாசிரியர் கூறும் குற்றச்சாட்டு சம்பவம் நடந்தது ஏப்ரல் 4, 2022 அன்று இரவு என்று குறிப்பிட்டுள்ளார். அன்று நான் இயக்குனரை தொலைபேசியில் அழைத்து கதையைச் சொன்னேன். கதையின் ஒன் லைனும், சில குறிப்புகளும் அவருக்கு என்னுடைய செல்போனில் இருந்து அவரது வாட்ஸ்-அப் நம்பருக்கு அனுப்பப்பட்டது. அவர் அதைப் படித்து விட்டு, தான் கதையை விரும்புவதாகவும், முழு கதையையும் சொல்வதற்கு என்னை கொல்லம் வர சொன்னார். கொல்லம் வருவது கடினம் என்றும், கொச்சி வந்ததும் சந்திக்கிறேன் என்று கூறிய போது, அது முடியாது என்றும், தான் பிஸியாக இருப்பதாகவும், சில சந்திப்புகளை கொச்சியில் முடித்துவிட்டு மும்பைக்கு கிளம்புவதாகவும் இயக்குநர் கூறினார். கதை பிடித்திருந்ததால் அதை எப்படியும் படமாக்குவீர்களா என்று கேட்டேன். கதை தனக்குப் பிடித்திருப்பதாகவும், கண்டிப்பாக படமாக்குவேன் என்றும் சொன்னதால் கொல்லம் சென்றேன். 

ஹோட்டலில் இரண்டு அறைகள் புக் செய்யப்பட்டிருந்தன. என்னுடைய அறைக்கு வந்து  கதையைச் சொல்லச் சொன்னார். பின்னர் ஒரு படத்தில் நடிக்க எனக்கு ஒரு ரோல் கொடுக்கலாம் என்று கூறிய அவர், இப்போது ஒரு காட்சியில் நடிக்க முடியுமா என்று கேட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்றும், எனது கதையை படமாக எடுக்க வேண்டும் என்றும் நான் கூறியபோது, ​​"இல்லை, நான் உங்களுக்கு ஒரு காட்சி சொல்கிறேன், நீங்கள் நடிகிறீர்கள்" என்று கூறினார். 

அதன் பின்னர் ஒரு மோசமான, நெருக்கமான படுக்கையறை காட்சியை என்னிடம் விளக்கிச் சொல்லி அந்த காட்சியில் நடிக்கச் சொன்னார். நான் அப்போதே, "என்னால் முடியும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறினேன். “அப்படியானால் நான் நடித்துக் காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு என்னை முத்தமிட்டு படுக்கையில் அமர வைக்க முயன்றார். எனக்கு நடிக்கவே ஆர்வம் இல்லை என்று சொல்லி அவரை விலக்கிவிட்டு, "கதையைக் கேளுங்க சார்.. கேட்டதும் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் சொல்லுங்கள்" என்றேன். எனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்பது உறுதியா என்று கேட்டதற்கு, நான் அதில் உறுதியாக இருக்கிறேன் என்று பதிலளித்தேன். "அப்படியானால், என் அறைக்கு வா, அங்கே பேசலாம்" என்றார். 

இத்தனையும் நடந்த பிறகு அவருடைய அறைக்கு செல்வதில் எனக்கு விருப்பமில்லை என்பதால் அவரது அறைக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை என்றும் முழு கதையையும் வாட்ஸ்அப்பில் அனுப்புகிறேன் என்றும் சொன்னேன். 

அவரது வேறு எந்த நோக்கமும் என்னிடம் வேலை செய்யாது என்று நேரிடையாகவே நான் சொன்னதும் அவர் அறையை விட்டு வெளியேறினார். அன்று இரவு அங்கிருந்து கிளம்பி காலையில் கொச்சி வந்தடைந்தேன். பின்னர் என்னுடைய செல்போனை சோதித்தபோது பல தவறான அழைப்புகள் வந்தன.

"யாரிடமும் சொல்லாமல் ஏன் இரவில் கிளம்பினாய்? ஏதாவது நடந்தால் யார் பொறுப்பேற்பது?" என்று கேட்டார். மிகுந்த பதற்றத்தில் இருந்தார். முந்தைய நாள் நடந்த சம்பவங்களை யாரிடமாவது சொல்லியிருக்கிறேனா என்று கேட்டதற்கு, நான் சொல்லவில்லை என்று பதிலளித்தேன். "சொல்லாதே. என் மகள் ஒரு பிரபல இயக்குனர், இந்த சம்பவம் வெளியே வந்தால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படும்" என்று கூறியுள்ளார். "என் எண்ணம் அதுவல்ல என்பதால் அங்கிருந்து கிளம்பினேன்" என்று சொன்னதும் என்னிடம் மன்னிப்பு கேட்டார். எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். 

“எனக்கு எதுவும் வேண்டாம், யாரிடமும் சொல்ல மாட்டேன்” என்று நான் அப்போது சொன்னேன். "நீ கொச்சியில் இருந்து வந்தாய்" என்று டிரைவரின் அக்கவுன்ட்டில் இருந்து எனக்கு பணம் அனுப்பினார். “அதுவும் தேவையும் இல்லை, கதை பிடிக்காததால் தேவையும் இல்லை சார்” என்று அந்த சம்பவத்தை அங்கேயே முடித்தேன்” என்று தனது புகாரில் ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை