பெண் காவலர் தற்கொலை.. தோழியிடம் இருந்து பிரித்ததால் விபரீதம்!
சமீபகாலமாக காவலர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தூத்துக்குடி ஸ்பிக்நகரில் வசித்து வருபவர் 28 வயது ஹரிப்பிரியா. தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீசாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகாரத்து ஆன நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேம்பாரில் அந்தோணி ஜெனிட் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.
இது இவருக்கு 2 வது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் இவர்கள், தூத்துக்குடி 3வது மைல் பகுதியில் உள்ள ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர்.கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த பெண் கமாண்டோ பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ஹரிப்பிரியாவுக்கும், மற்றொரு பெண் காவலரான நவநீதப் பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நவநீதப்பிரியா பெண்ணாக இருந்து மருத்துவ சிகிச்சை மூலம் ஆணாக மாறியவர்.
இதன் காரணமாக ஹரிப்பிரியாவிற்கும், நவநீதப் பிரியாவிற்கும் தன் பாலின சேர்க்கை பழக்கம் உருவாகி உள்ளது. அடிக்கடி இருவரும் சந்தித்து தனிமையில் இருந்து வந்தனர்.ஹரிப்பிரியா விடுமுறை எடுத்துக் கொண்டு தனது கணவரிடம் சென்னைக்கு பணி நிமித்தமாக செல்வதாக கூறி சென்றார். ஹரிப்பிரியா நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அந்தோணி ஜெனிட் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டார். அப்போது ஹரிப்பிரியா, கணவரிடம் கோவில்பட்டியில் இருப்பதாக கூறி ஏமாற்றினார். இதனைத் தொடர்ந்து அந்தோணி ஜெனிட், ஹரிப்பிரியாவின் குடும்பத்தினருடன் சென்னை சென்று அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் ஹரிப்பிரியாவை காணவில்லை என புகார் அளித்துள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!