undefined

பெண் நோயாளிக்கு மயக்க ஊசி போட்டு பலாத்காரம்.. கொடூர மருத்துவர் அதிரடியாக கைது!

 

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஹஸ்னாபாத்தில் ஒரு பெண் ஆண் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்துள்ளார். பெண்ணின் கணவர் வெளியூரில் வேலைக்காக தங்கி இருந்தார். சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு மயக்க ஊசி போட்டு மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், ஆபாசமான படங்களை எடுத்து, அந்த படங்களை வைரலாக்குவதாகவும் மிரட்டி அந்தப் பெண்ணை மருத்துவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதையடுத்து, ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்குவதாக கூறி அந்த பெண்ணிடம் இருந்து சுமார் ரூ.4,00,000 பணம் பறித்துள்ளார். கணவன் வெளியூரில் இருப்பதால் ஆரம்பத்தில் பயத்தில் யாருக்கும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், சமீபத்தில் அவரது கணவர் வீடு திரும்பியபோது, ​​ அவரிடம் எல்லாவற்றையும் கூறினார். இதையடுத்து மருத்துவரை கைது செய்யக்கோரி போலீசில் புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் மருத்துவரை இன்று கைது செய்தனர். மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், 5 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். அடுத்த கட்டமாக ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் ரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!