விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்கிட்டு தற்கொலை... பரபரப்பு!
தமிழகத்தின் தலைநகர் சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்தவர் நிர்மலா.
இவர் உள்நாட்டு முனையம் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு நேற்று இரவு வழக்கம் போல் பணிக்கு வந்துள்ளார். இன்று காலை மற்றொரு பெண் அதிகாரி சென்று பார்த்த போது நிர்மலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் நிர்மலா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நிர்மலா டிசம்பர் மாதம் பணி ஓய்வு பெற இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!