நடவடிக்கை எடுங்க... கடிதம் எழுதிவைத்து பெண் போலீஸ் காவல்நிலையத்தில்   தற்கொலை!! 

 

பீகார் மாநிலத்தில்  சமஸ்திபூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தவர்  அர்ச்சனா குமாரி .  பெண் காவலராக இருந்த இவரது கணவரும்  காவலராக பணியாற்றி வந்த நிலையில் இவர் கடந்த 2   மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.இந்நிலையில் அர்ச்சனா குமாரி தனது அலுவலகத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் போலீசாரின் கையில் சிக்கியுள்ளது.  

 


அந்த கடிதத்தில், அரசு குடியிருப்பில் தங்கியிருந்த தன்னையும், தனது கணவரையும் காலி செய்யவேண்டும் என  தன்னுடைய  மூத்த காவல் அதிகாரி நயன் குமார்  மனரீதியாக துன்புறுத்தி வந்தார் . குடியிருப்பில் தங்கிக் கொள்ள துணை காவல் கண்காணிப்பாளரின்  வாய்மொழி உத்தரவு இருந்த போதிலும் இந்த நிலை தொடர்ந்தது.  

 


இந்த குடியிருப்பில் ஏற்கனவே குடியிருந்த மேஜர் நயன்குமார்   தனது அறையின் பூட்டை அர்ச்சனா குமாரியின் கணவர் உடைத்ததாக குற்றம்சாட்டி வீட்டை காலி செய்ய  தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தார். தங்களை துன்புறுத்திய காவல் அதிகாரி மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்கொலை கடிதத்தில் அர்ச்சனா குமாரி வலியுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை