undefined

சுரங்கத் துறை பெண் இணை இயக்குநர் கத்தியால் குத்திக் கொலை...!!

 


கர்நாடகாவின் சுரங்கம் மற்றும் புவியியல் துறை துணை இயக்குநr பிரதிமா.  பெங்களூரு சுப்ரமணியபோராவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவருடைய கார் ஓட்டுனர் பிரதிமாவின் வேலை முடிந்ததும் வீட்டில் இறக்கி விட்டுள்ளார். தொடர்ந்து 8 வருடங்களுக்கும் மேலாக  பிரதிமா அந்த வீட்டில் தான் வசித்து வந்துள்ளார்.  , பிரதிமாவின் கணவரும், மகனும் வீட்டில் இல்லாதபோது இரவு சுமார் 8:30 மணிக்கு   அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


 சனிக்கிழமை இரவு முழுவதும்   பிரதிமாவின் உடல் ரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளது. நவம்பர் 5ம் தேதியான  இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பிரத்திமாவின் சகோதரர்  தற்செயலாக அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது தான் இந்த உண்மை வெளியாகியுள்ளது.  சகோதரிக்கு முந்தைய நாள் இரவு   போன் செய்துள்ளார். அப்போது  போனை எடுத்து சகோதரி பதிலளிக்கவில்லை.  அதனையடுத்து உடனடியாக காவல்துறையை தொடர்பு கொண்டேன்  .  

அதன் பிறகு நேரில் சென்று பார்க்கலாம் என வீட்டிற்கு விரைந்தேன். இந்த கோர சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்தேன் எனக் கூறியுள்ளார்.  இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கர்நாடக அரசில் பணிபுரியும் ஒரு உயர் பதவியில் இருக்கும் அதிகாரி கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக உயிரிழந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!