undefined

விவசாயிகளுக்கு  விருந்து சாப்பாடு,  மோதிரம் ... தவெக தலைவர் விஜய் அட்ராசிட்டி!

 

 தமிழக வெற்றிக் கழகத்தில் முதல் அரசியல் மாநாடு மிக  பிரம்மாண்டமாக  அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்காக  170 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுப் பலத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு திருவிழா போல நடத்தப்பட்டது.  
இந்த மாநாடு நடத்துவதற்கு அந்த பகுதியில் நிலம் வைத்திருந்த விவசாயிகள் மற்றும் சிலர் அனுமதி கேட்கப்பட்டு அவர்கள் அனுமதி வழங்கிய பிறகே அங்கே மாநாடு நடத்தப்பட்டது.

 மாநாடு நடத்துவதற்கு இடம் தந்து உதவிய அவர்களுக்கு எதாவது நன்றி தெரிவிக்கும் வகையில் கொடுக்கவேண்டும் என்பதற்காக விஜய் நிலம் வழங்கிய அப்பகுதி விவசாயி ஒருவருக்குப் பசுமாடு, கன்றுக்குட்டியை தன்னுடைய நிர்வாகிகள் மூலம் வழங்கியிருந்தார்.அதே போல் தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அக்கட்சித் தலைவர் விஜய் விஜய் இன்று விருந்தளித்தார். இதனையடுத்து  விஜய் வைக்கும் விருந்து சாப்பிட 300 பேர் வருகை தந்திருந்தார்கள். அவர்களுக்குச் சைவ உணவு சமைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், விஜய் தன்னுடைய கையால் பரிமாறினார். 


விருந்து சாப்பிட்டு முடித்த பிறகு தாம்பூலத்தட்டில் வேட்டி சட்டைகள் மற்றும் சேலைகள் பழங்கள் வைத்துக் கொடுத்து தன்னுடைய நன்றியை விஜய் நிலம் வழங்கியவர்களுக்குத் தெரிவித்தார். அதில் 2 பேருக்கு  விஜய் தங்க மோதிரத்தையும் பரிசாக வழங்கினார்.மாநாட்டை நடத்த உறுதுணையாக இருந்த கட்சி நிர்வாகி 2 பேருக்குத் தான் விஜய் தங்கம் மோதிரம் பரிசளித்தார்.  மாநாட்டை நடத்த உறுதுணையாக இருந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஸ்வநாதனுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!