undefined

மகன் உயிரிழந்த இடத்தில் விஷம் அருந்தி தந்தை தற்கொலை.. சோக பின்னணி!

 

நெல்லை சந்திப்பு பாலபாக்யநகர் 1வது குறுக்குத் தெருவில் வசிப்பவர் ஜெயராம் (வயது 63). இவர் நெடுஞ்சாலைத்துறையில் உதவி கோட்ட பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார். ஒரு மகன் ஊரில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக வேலை செய்கிறான்.

மற்றொரு மகன் விக்னேஷ் ராஜா கடந்த 2017-ம் ஆண்டு பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டி மலையில் 4 வழிச்சாலையில் சென்றபோது விபத்தில் உயிரிழந்தார். மகன் இறந்த சோகத்தில் ஜெயராமும் அவரது மனைவியும் இருந்தனர். அவர்களுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஆறுதல் கூறினர். இருந்தாலும் மகனைப் பிரிந்ததைத் தாங்க முடியாமல் தன் மகனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார் ஜெயராம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் ஜெயராம்  ​​விபத்தில் மகன் உயிரிழந்த ரெட்டியார்பட்டி மலைப்பகுதிக்கு சென்றார். அங்கு விஷம் கலந்த மதுவை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு பாளையங்கோட்டை ஐ-கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அன்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!