undefined

மகளின் வாழ்க்கையை சீரழித்த தந்தை, அண்ணன்.. கண்டுக்காத போலீஸ்.. கதறும் தாய்!

 

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமியின் தாயார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில் தனது மகளை தந்தை மற்றும் அவரது  பெரியப்பாவின் மகன் 9 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறினார். ஆனால் அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது.குடும்ப தகராறு காரணமாக கணவரை பிரிந்து 6 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறேன்.எனக்கு ஒரு மகள் உள்ளார்.அவர் எனது கணவருடன் வசித்து வந்தார். இரண்டு வருடங்கள் எனது மாமியார் வீட்டில் இருந்து வருகிறார். கடந்த 9 மாதங்களாக, அந்த பெண்ணின் தந்தையும், பெரியப்பாவின் மகனும், பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். நான் கடந்த ஞாயிற்றுக்கிழமை இது குறித்து புகார் அளித்தேன் எனவே நான் காவல் நிலையத்திற்குச் சென்று, "நீங்கள் புகார் எடுக்க போகிறீர்களா அல்லது நான் ஸ்டேஷன் வாசலில் இறக்க வேண்டுமா?" என கேட்டுள்ளார்.

அதற்கு, அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரி ஒருவர், ஒரு பேப்பரை கீழே எறிந்துவிட்டு, "இதோ, புகாரை இதில் எழுதுங்கள்" என்றார். நானும் அந்த பெண்ணின் அப்பா, அண்ணன் பெயர்களை எழுதி என்ன நடந்தது என்ற விவரங்களையும் கொடுத்தேன். அப்போது அங்கிருந்த பெண் போலீஸ் அதிகாரி என்னிடம், "அட, விடுமா  அண்ணன் தான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டான்,  பெத்த அப்பாத்தானே,  அவங்கள மன்னிச்சுடு, இதை ஏன் பெரிதுபடுத்துற?" என கேட்கிறார்கள். என் குழந்தைக்கு நீதி வேண்டும், எனக்கு நீதி வேண்டும். என் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று தாய் கண்ணீருடன் கூறினார். அடுத்த கட்ட விசாரணை இனி தான் தெரிய வரும்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!