மீண்டும் வேகமெடுக்கும் விவசாயிகள் போராட்டம்... 3 நாட்களுக்கு இணையதள சேவை முடக்கம்..  அதிரடி காட்டிய முதல்வர்!

 

ஹரியானாவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் ஏராளமான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், விவசாயிகள் சங்கங்கள் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் கூறி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இன்னும் செவிசாய்க்கவில்லை.

இந்த நிலையில் அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் முழு அடைப்பு போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200 விவசாய அமைப்புகள் இந்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

பிப்ரவரி 13ம் தேதி டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடத்த உள்ளனர்.இதற்காக நாளை முதல் ஹரியானாவிலிருந்து ஊர்வலமாக புறப்பட உள்ளனர். இந்த நிலையில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.அதாவது நாளை முதல் வரும் 13ம் தேதி வரை ஹரியானாவின் 7 மாநிலங்களில் இணையதள சேவையை துண்டிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அம்பாலா, குருசேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், பதிகராபாத், சிர்சா உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை முதல் 3 நாட்களுக்கு இணையதள சேவை துண்டிக்கப்படுகிறது.

அதன்படி, ஒரே நேரத்தில் பலருக்கு செய்தி அனுப்பும் வசதி, இணையதள வசதி துண்டிக்கப்பட உள்ளது. செல்போனில் மட்டுமே பேச முடியும். இணையதள சேவை ரத்து தொடர்பான உத்தரவு நாளை காலை 6 மணி முதல் பிப்ரவரி 13ம் தேதி இரவு 11.59 மணி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஊர்வலத்தை தடுக்க ஹரியானாவில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, விவசாயிகள் போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து, டெல்லிக்குள் நுழையும் சாலைகளில், விரிவான கண்காணிப்பு பணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!