undefined

ரசிகர்கள் அதிர்ச்சி... பிரபல பாடி பில்டர், பிட்னஸ் ஆர்வலர் ரேச்சல் திடீர் மரணம்!

 

உலகம் முழுவதும் பிட்னெஸ் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வந்த பிட்னெஸ் பிரபலம் ரேச்சல் திடீரென காலமானார். தனது இன்ஸ்டாவில், சுமார்  1.4 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்த பாடிபில்டர் மற்றும் ஃபிட்னஸ் ஆர்வலர் ரேசெல் சேஸ், ஐந்து குழந்தைகளுக்கு தாய் என்பதை  யாரும் அத்தனை எளிதில் நம்ப மாட்டார்கள். 

நியூசிலாந்து பாடிபில்டர் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர் ரேச்சல் 1.4 மில்லியனுக்கும் அதிகமான ஆன்லைன் பின்தொடர்பவர்களைக் கொண்டவர். அவரது திடீர் மரணம் குறித்த செய்தி பிட்னெஸ் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது. ரேச்சலின் திடீர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரேச்சலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு, தலைமை தாங்கி, அவரது மூத்த மகள் ஆனா எழுதினார்.

"அவர் ஆதரவாகவும், அன்பான இதயம் கொண்டவராகவும், எப்போதும் எங்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குபவர். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை ஊக்கப்படுத்திய லட்சியம் கொண்ட ஒரு பெண்மணி" என்று ரேச்சலின்  மகள் கூறியுள்ளார்.

நண்பர் Keith O'Connell எழுதினார்: "பொய் சொல்லப் போவதில்லை, என் வாழ்வில் மிகக் குறைவான விஷயங்களே உன் மறைவைப் போல என்னைத் தாக்கின... நீ வாழ எவ்வளவோ எஞ்சியிருந்தாய். கொடுக்க இவ்வளவு அன்பு" என்று எழுதினார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!