பிரபல சின்னத்திரை நடிகை சாலை விபத்தில் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் பிரபல நடிகை பவித்ரா ஜெயராம். இவர் தெலுங்கு மொழியில் 'திரினயானி' தொடரில் திலோத்தமா கதாபாத்திரத்தில் நடித்ததில் பெரும் வரவேற்பை பெற்றார். தெலுங்கானா மாநிலம் மெகபூப் நகர் அருகே இன்று நடந்த சாலை விபத்தில் நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்தார். இன்று அதிகாலை நடிகை பவித்ரா ஜெயராம் மற்றும் அவரது உறவினர்கள் காரில் கர்நாடகாவின் மண்டியா பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. அத்துடன் ஐதராபாத்தில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்து ஒன்று காரின் வலது புறத்தில் மோதிவிட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நடிகை பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி துடிதுடித்து உயிரிழந்தார். அவரது உறவினர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!