undefined

 72 வழக்குகள்... பிரபல ரவுடி கைது... தப்பிக்க முயன்றபோது கால் முறிவு!

 
திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி என நான்கு மாவட்டங்களிலும் குற்றச்செயல்கள் செய்து போலீசாருக்கு போக்கு காட்டி வந்த பிரபல ரவுடி பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது கால்முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியை தென்காசி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் கல்யாணிபுரம் ஊரைச் சேர்ந்தவர் மாடசாமி. இரவது மகன் பாலமுருகன். சரித்திர பதிவேடு ரௌடியான பாலமுருகன் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ஆதாய கொலை, திருட்டு மற்றும் 72-க்கும் மேலான பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவர் பொதுமக்களை அச்சுறுத்தி நகை மற்றம் பணம் பறிப்பதை வாடிக்கையாக கொண்டவர்.

2014ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதியில் ராஜன் என்பவரை 2 லட்சம் ரூபாய் பணத்திற்காக கொலை செய்து போர்வையில் சுற்றி ஆற்றில் வீசியுள்ளார். மேலும் 2019ம் ஆண்டு கடையம் ஊரைச் சார்ந்த செந்தாமரை மற்றும் அவரது கணவர் சண்முகம் இருவரும் அவர்களது தோப்பு வீட்டில் தனியாக வசித்தவர்களிடம் மேற்படி பாலமுருகன் அருவாளை வைத்து மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற போது வயதான தம்பதிகள் இருவரும் கையில் கிடைத்த பிளாஸ்டிக் சேர் மற்றும் துடைப்பத்தைக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தினர். 

அப்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதற்காக தமிழக முதல்வர் அந்த தம்பதியரை நேரில் அழைத்து பாராட்டி வெகுமதிகளை வழங்கினார். இவ்வழக்கிலும் பாலமுருகன் முக்கிய குற்றவாளி ஆவார்.

இவர் காவல்துறையினரின் பாதுகாப்பில் இருந்து பலமுறை தப்பிச் சென்றுள்ளார். 2021ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி காவல் நிலைய குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு பேராவூரணி கிளை சிறையில் அடைக்கப்பட்டவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சையில் இருக்கும் போது மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் 2023ம் ஆண்டு கேரளா மாநிலம், மறையூர் காவல் நிலைய குற்ற வழக்கு சம்பந்தமாக கேரளா மாநில போலீசாரால் கைதி வழிக்காவலில் கொண்டு செல்லும் போது திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு டோல்கேட் அருகில் வைத்து போலீசாரை தாக்கி விட்டு மீண்டும் தப்பிச் சென்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம், கேரளா மாநிலம், திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலமுருகன் திருச்சூர் வியூர் சிறைக்கு மாற்றப்பட்டார். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி காவல் நிலைய குற்ற வழக்கிற்காக தமிழக போலீசாரால் 17.05.2024ம் ஆண்டு தேனி பெரியகுளம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் திருச்சூர் சிறையில் அடைக்க கொண்டு செல்லும் போது சிறை முன்பு காவல் வாகனத்தில் இருந்து தப்பிச் சென்றவரை காவலர்கள் தேடி வந்தனர். 

போலீசாரிடமிருந்து தப்பிச்சென்ற ரௌடி பாலமுருகன் கடையம், சங்கரன்கோவில், திருநெல்வேலி, சாத்தூர், திருப்பூர், திருத்துறைப்பூண்டி மற்றும் சென்னை போன்ற பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளார். அவரை பிடிப்பதற்காக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் ஆலங்குளம் உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்னர்.

இந்நிலையில் கடையம் அருகே ரௌடி பாலமுருகன் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் விரைந்து சென்று பாலமுருகனை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றபோது போலீசாரிடமிருந்து தப்ப முயன்று கால் முறிவு ஏற்பட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து தற்போது திருநெல்வேலி பாளையங்கோட்டை மத்திய சிறையில் பாலமுருகன் அடைக்கப்பட்டார்.