undefined

 பிரபல இயக்குநர் ‘திரெளபதி’ மோகன் ஜி திடீர் கைது... திரையுலகில் பரபரப்பு

 
 

பிரபல திரைப்பட இயக்குனர் திரௌபதி மோகன் ஜி, இன்று தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்று காலை இயக்குநர் மோகன் ஜியைக் கைது செய்த காவல் துறையினர், என்ன காரணத்திற்காக கைது செய்திருக்கிறார்கள், எந்த வழக்கில் கைது என்று எந்தவிதமான முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறவில்லை என்று கூறப்படுகிறது. 

இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது என்றும், அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை என்றும் திரையுலகிலும், இயக்குநர் மோகன் ஜி நண்பர்கள் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ட்விட்டரில் வெளியிடப்பட்ட பதிவில், “திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. 

கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!