undefined

திரையுலகில் அடுத்தடுத்து சோகம்... பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்.!

 

 தமிழ் திரையுலகில் திடீர் உயிரிழப்புக்கள்  சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல திறமையான  கலைஞர்களை திரையுலகம்அடுத்தடுத்து இழந்து வருகிறது.  நடிகர் விவேக் தொடங்கி   மயில்சாமி  , மனோ பாலாவின் திடீர் மரணங்கள்  ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 
கடந்த சில நாட்களுக்கு முன்  முன்னணி வில்லன் நடிகரான டேனியல் பாலாஜி திடீர்  மாரடைப்பு காரணமாக, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 இவரது உயிரிழப்பு  தமிழ், தெலுங்கு,கன்னடம், மற்றும் மலையாள திரையுலகமும் சோகத்தில் ஆழ்ந்தது.   இந்த வரிசையில் 6 வயது முதல்  தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வந்த, நடிகர் விஸ்வேஷ்வர ராவ் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் குழந்தை நட்சத்திரமாக இதுவரை சுமார் 150 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 தமிழில்  நகைச்சுவை மற்றும்  குணச்சித்திர வேடத்திலும்  பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்  . சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்த இவருக்கு வயது 62. திடீர்  உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இறுதி சடங்கு, நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவருடைய உடல்  சென்னை சிறுசேரியில் உள்ள அவருடைய வீட்டில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்