பிரபல வில்லன், குணச்சித்திர நடிகர் காலமானார்..திரைத்துறையில் சோகம்!
பிரபல மலையாள நடிகர் மேகநாதன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 60. மேகநாதன் நுரையீரல் தொடர்பான நோயினால் அவதிப்பட்டு வந்த நிலையில் கோழிக்கூட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று நவம்பர் 20ம் தேதி புதன்கிழமை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அவரது வீட்டில் இறுதி சடங்கு நடைபெறும் என உறவினர்கள், குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
மேகநாதன் கேரளாவில் திருவனந்தபுரத்தில் லெஜண்டரி நடிகர் பாலன் கே.நாயர்- சாரதா நாயர் தம்பதிக்கு 3வது மகனாக பிறந்தவர் .இவருடைய மனைவி சுஸ்மிதா. மகள் பார்வதி. மேகநாதன் 1983ல் அஸ்த்ரம் படத்தில் அறிமுகமானார். இவர் 50 படங்களுக்கும் அதிகமாக நடித்துள்ளார். குணச்சித்திர நடிகராக அறியப்பட்ட மேகநாதன் வில்லனாக பல படங்களில் நடித்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பஞ்சக்னி, சமயம், ராஜதானி, பூமிகீதம், செங்கோல், மலப்புரம் ஹகி மஹானயா ஜோஜி, பரியிக்கர பாப்பன், வாஸ்தவம் போன்ற படங்கள் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. சினிமாவை தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
கடைசியாக அவரது நடிப்பில் வெளியான படம் சமதான புஸ்தகம் இந்தாண்டு தொடக்கத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி உட்பட பல பிரபலங்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சிவன் குட்டி இவரது மறைவு குறித்து "சினிமாவில் வில்லனுக்கென்று இருந்த முகத்தை மாற்றியமைத்தவர்" என பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!