அதிர்ச்சி... அதிமுக கிளை செயலாளர், மனைவி விஷம் குடித்து தற்கொலை!
அதிமுக கிளை செயலாளர் மற்றும் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் என்ஜிஓ காலனியைச் சேர்ந்தவர் ராமதுரை (65), அதிமுக கிளாப்பாகுளம் கிளைச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் நிதித்துறையிலும் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவரது மனைவி வெள்ளத்துரைச்சி (50). கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்னையால் தம்பதியர் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ராமதுரையும், வெள்ளத்துரைச்சியும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
மயங்கி விழுந்தவர்களை உறவினர்கள் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தம்பதி உயிரிழந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!