பகீர்.. விரைவுச்சாலையில் சாக்கு மூட்டையில் கிடந்த பெண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை!
மகாராஷ்டிர மாநிலம் மும்பை-புனே விரைவுச்சாலை அருகே அடையாளம் தெரியாத பெண்ணின் உடல் இரண்டு சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். விரைவுச்சாலையின் ஷிர்கான் படா பகுதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்களால் இந்த சாக்கு மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றை திறந்து பார்த்தபோது பையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள முட்புதரில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலம் இரண்டு சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்டு கிடப்பதை கண்டனர். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட தகவலின்படி, பெண் இரண்டு நாட்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் மற்றும் உடல் சிதைவடையத் தொடங்கியிருக்கலாம், மேலும் இறந்தவரை அடையாளம் காண சம்பவ இடத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மேலும், காணாமல் போன பெண் குறித்து சமீபத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!