undefined

பகீர்... கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் போலீஸ் சடலமாக மீட்பு!

 

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பெண் போலீஸ் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியையும், அந்த பகுதியினர் மத்தியில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் களியக்காவிளை குளப்புறம் அருகே அருகத்துவிளை வைலங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்பர் ரஸ்கின் (45). இவர் தனக்கு சொந்தமான ரப்பர் தோட்டத்தை பராமரித்து வந்தார். இவருடைய மனைவி மினி (42). இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் உள்ளார். தமிழக காவல்துறையில் 2003-ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்த மினி பல்வேறு போலீஸ் நிலையங்களில் பணிபுரிந்தார். பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். அப்போது அவர் மனநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு தற்போது வரை மருத்துவ விடுப்பில் இருந்தார். இதற்கிடையே மினியின் கணவரான ஜாஸ்பர் ரஸ்கினும் மனநோய் பாதிப்புக்கு ஆளானார். இதனால் வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளார்.

இந்நிலையில் தூக்கத்தில் இருந்து 5 வயது மகள் எழுந்துள்ளார். அப்போது தாயார் மினி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஓடி சென்று அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் அச்சத்துடன் கூறியுள்ளார்.

இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் பதற்றத்துடன் மினியின் வீட்டுக்கு விரைந்தனர். அங்கு மினியின் மகள் கூறியதை போன்ற சம்பவம் அரங்கேறியதை பார்த்து துடிதுடித்து போனார்கள். பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தனர். உடனே ஊழியர்கள் அங்கு வந்து பார்த்த போது மினி இறந்ததை உறுதி செய்தனர்.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மினியின் கணவர் ஜாஸ்பர் ரஸ்கின் வீட்டின் ஓரத்தில் பித்து பிடித்ததை போன்று இருந்தார். இதனால் போலீசார் மோப்பநாயை வரவழைத்தனர். மினியின் உடலை மோப்பம் பிடித்த நாய் வெளியே செல்லாமல் அங்கேயே சிறிது நேரம் சுற்றி விட்டு நின்றது. அதே நேரத்தில் மினியின் கணவரிடமும் செல்லவில்லை. இதனையடுத்து மினியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், மர்மமான முறையில் மினி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் மினி பிணமாக கிடந்துள்ளார். மனநோயால் அவரே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என விசாரணை நடக்கிறது என்றனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா