undefined

பகீர்... தாய் வீட்டிற்கு சென்ற மனைவி... விரக்தியில் ஆணுறுப்பை வெட்டி தற்கொலைக்கு முயன்ற கணவன்!

 

குடும்ப தகராறில் கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு மனைவி சென்ற நிலையில், விரக்தியில் ஆணுறுப்பை வெட்டி கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள டி.பெருமாபாளையம் குள்ளகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். மூட்டை தூக்கும் தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக, முருகனின் மனைவி மற்றும் குழந்தைகள், சில ஆண்டுகளுக்கு முன், சூரமங்கலத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்குச் சென்றனர்.

இதனால் முருகன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே சம்பவத்தன்று முருகன் திடீரென தனது பிறப்புறுப்பை கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது வலி தாங்காமல் அலறினார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியை பிரிந்த வேதனையில் கூலித்தொழிலாளி தனது பிறப்புறுப்பை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!