undefined

பகீர்.. 8 ஆண்டுகளாக மூச்சுக்குழாயில் சிக்கி இருந்த நாணயம்.. அறுவை சிகிச்சையில் உயிர் பிழைத்த நபர்!

 

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் சர் சுந்தர்லால் மருத்துவமனையில் 40 வயதுடைய நபரின் மூச்சுக்குழாயில் 25 பைசா நாணயம் சிக்கிக்கொண்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 32 வயதில் காசை வாயில் வைத்துக்கொண்டு தூங்கியபோது விழுங்கினார். ஆனால் தற்போது தான் அதன் பாதிப்பு தெரியவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது மூச்சுக்குழாயில் இருந்த நாணயத்தை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.

ஆனால் இந்த நபரின் மூச்சுக்குழாயில் கடந்த 8 ஆண்டுகளாக ஒரு நாணயம் சிக்கிக்கொண்டுள்ளது. இதனால் மூச்சுத் திணறல், நிமோனியா, நுரையீரல் பாதிப்பு, சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படும். அவருக்கு கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நாணயம் அகற்றப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்,'' என்றார்.மேலும், மயக்கவியல் துறை மருத்துவர் கூறுகையில், ''இத்தகைய நடைமுறைகளுக்கு மிக அதிக துல்லியம் தேவைப்படுகிறது. ஒரு சிறிய தவறு கூட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இந்த நோயாளியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மேம்பட்ட ரிங்கிங் ப்ரோன்கோஸ்கோப்பைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், அந்த நபருக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!