undefined

பகீர்.. பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கோவில் பூசாரி.. போக்சோவில் அதிரடியாக கைது!

 

மதுரையில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய தனியார் கோவில் பூசாரி சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி தம்பதியின் 17 வயது மகள் பி.பி.குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் நேற்று மதுரை அரசு மருத்துவமனைக்கு மகளை பெற்றோர் அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது, ​​அவர் 8 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்ததால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, மருத்துவமனை நிர்வாகம் மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தது. பாதிக்கப்பட்ட மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கண்ணனேந்தல் பகுதியில் உள்ள தனியார் கோவில் நிர்வாகி (பூசாரி) தான் காரணம் என தெரிகிறது. இதையடுத்து, போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மாணவி பூசாமி மீது புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘மாணவியின் வறுமையை பயன்படுத்தி படிப்பிற்கு உதவுவதாக கூறி மாணவியை கோவிலுக்கு அழைத்த பூசாரி, விடுமுறை நாட்களில் கோவிலுக்கு சென்று மாணவியை கோவிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வைத்தார். முதற்கட்ட விசாரணையில், பூசாரி இந்த முறையை பயன்படுத்தி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் கர்ப்பமானதாகவும் தெரிகிறது. 48 வயதான பூசாரி சில பெண் மாணவிகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும் தெரிகிறது. விசாரணை முடிவில் அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!