undefined

பகீர்.. வீடு புகுந்து செயின் பறித்த வடமாநிலத்தவர்.. ரயில் நிலையத்தில் சுற்றி வளைத்து பிடித்த காவல்துறை!

 

சென்னை தாம்பரம் அடுத்த கிருஷ்ணாநகரைச் சேர்ந்தவர் பிரியங்கா. கதவு மணி அடிக்கும் சத்தம் கேட்டு கதவைத் திறந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் பிரியங்காவின் முகத்தில் மிளகாய் பொடியை வீசிய நிலையில், அவர் மயங்கி விழுந்தார். அப்போது, ​​அந்த நபர் பிரியங்காவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார். இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு பிரியங்கா தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது, ​​பிரியங்கா வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராம் மிலன் என்பவர் செயின் பறிப்பில் ஈடுபட்டது உறுதியானது. இதற்கிடையே ராம் மிலன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு விரைந்தனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த ராம் மிலனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தங்கச் சங்கிலியை வாங்கி தருமாறு கேட்டு மனைவி தன்னை துன்புறுத்தியதால் தான் செயின் பறிப்பில் ஈடுபட்டதாக ராம் மிலன் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர். செயின் பறிப்பு குறித்த புகாரின் பேரில் போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை 6 மணி நேரத்தில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!