undefined

பகீர்.. மருத்துவமனைக்குள் புகுந்து மனைவி, மகளை கொன்ற கொடூரம்.. கணவன் வெறிச்செயல்!

 

அருணாச்சல பிரதேசத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் உள்ள செப்பா சிவில் மருத்துவமனையில் நேற்று காலை 11.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார். அப்போது அந்த நபர் பெண்கள் உட்பட 6 பேரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். தடுக்க வந்த போலீஸ்காரரையும் தாக்கினார். இந்த தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிழக்கு கமெங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. சிகோம் கூறுகையில், உயிரிழந்த மூவரும் தாக்குதலாளியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கொலையாளியின் சகோதரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவத்தன்று ஆயுதத்துடன் மருத்துவமனைக்கு வந்த நபர் தனது சகோதரியை முதலில் தாக்கியுள்ளார்.

பின்னர் அவர் தனது மனைவி தாடே சாங்பியா, மகள்கள் நாகியா சாங்பியா மற்றும் பாசா வெல்லி ஆகியோரைத் தாக்கினார். அவர்கள் மூவரும் இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலையாளியை தடுக்க வந்த போலீஸ்காரர் மின்லி கீ காயம் அடைந்து இட்டாநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!