undefined

பகீர்.. ஆற்றின் பாலத்தில் கவிழ்ந்து விழுந்த கார்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் பலியான சோகம்!

 

மேற்கு மகாராஷ்டிர மாநிலம் சாங்லி மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேர் கோலாப்பூரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​நள்ளிரவு 12.30 மணியளவில் கிருஷ்ணா நதியின் மீதுள்ள பாலத்தில் அவர்கள் சென்ற கார் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 3 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கிருஷ்ணா நதியின் பழைய பாலத்தின் வழியாக கார் சென்று கொண்டிருந்தபோது, ​​ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்குள்ள இரண்டு பாலங்களுக்கு இடையே கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிரசாத் பால்சந்திர கேடேகர் (35), அவரது மனைவி பிரேரனா (36), வைஷ்ணவி சந்தோஷ் நர்வேகர் (21)  ஆகியோர் உயிரிழந்தனர். சமர்ஜீத் பிரசாத் கேடேகர் (7), வரத் சந்தோஷ் நர்வேகர் (19), சாக்ஷி சந்தோஷ் நர்வேகர் (42) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!