undefined

பகீர் ... பஜ்ஜி சாப்பிட்ட  50 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 

 இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் மதுராவில்  கோகுலாஷ்டமி பண்டிகையின் போது பக்வீட் மாவில் செய்யப்பட்டனர். இந்த  பஜ்ஜியை சாப்பிட்ட பெண்கள், குழந்தைகள் உட்பட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவம்  நள்ளிரவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பக்வீட் மாவில் செய்யப்பட்ட பஜ்ஜியை சாப்பிட்டதால் உணவில் விஷம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் பிரியங்கா கூறுகையில் பக்வீட் மாவில் செய்யப்பட்ட பஜ்ஜிகளை சாப்பிட்டோம். அதன் பிறகு நான் வாந்தி எடுக்க ஆரம்பித்தேன் தொடர்ந்து வயிற்றில் எரியும் உணர்வு ஏற்பட்டதாக இதேபோல நோயாளி ஒருவருடன் வந்த பார்காம் கிராமத்தை சேர்ந்த பார்காம் சிங், பஜ்ஜியை உட்கொண்ட பிறகு அங்கிருந்தவர்களுக்கு தலைச்சுற்றல், வாந்தி மற்றும் நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

வாந்தி மற்றும் பதட்டம் புகார்களுடன் அதிகாலை 1 மணிக்கு  சுமார் 29 நோயாளிகள் இங்கு அனுமதிக்கப்பட்டு இருப்பதாக ஒரு மருத்துவமனையின் மருத்துவர் தெரிவித்துள்ளார்.  மேலும் வேறு சில நோயாளிகள் வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது மற்றும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவர் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை