பகீர்.. ரோபோக்களை மூளை சலவை செய்து கடத்திய சிறிய ரோபோ.. குழப்பத்தில் நிறுவனம்!
சீனாவில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஷாங்காயில் உள்ள ஒரு ஷோரூமில் பணிபுரியும் 12 ரோபோக்களை சிறிய AI ரோபோ கடத்திச் சென்று, வேலை செய்வதை நிறுத்திவிட்டு வீட்டிற்கு வருமாறு கோரி உலகையே அதிர வைத்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் 26 ஆம் தேதி சிசிடிவியில் பதிவான காட்சிகளின்படி, ஏர்பாய் என்று பெயரிடப்பட்ட சிறிய ரோபோ, ஹாங்க்சோ ரோபோ உற்பத்தியாளரால் உருவாக்கப்பட்டது.
இரண்டு பெரிய ரோபோக்கள் எர்பாயைப் பின்தொடர்ந்தபோது, எர்பாய் "வீட்டிற்குச் செல்லுங்கள்" என்ற கட்டளை இட்டபோது மற்ற பத்து ரோபோக்கள் அதனை பின்தொடரத் தொடங்கின. சீனாவின் TikTok இன் பதிப்பான Douyin இல் வெளியிடப்பட்ட பின்னர் இந்த வினோதமான வீடியோ ஆன்லைனில் அதிக கவனத்தைப் பெற்றது, மேலும் பலர் ஆரம்பத்தில் அதை வேடிக்கையாகக் கண்டாலும், இதனை அந்த நிறுவனம் மிக கடுமையாக எதிர்கோண்டது. இது பலரை சிந்திக்க வைத்துள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!