undefined

இன்று 6 நிமிட இடைவெளியில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை... பயணிகள் உற்சாகம்!!

 

இன்று சென்னையில் 53 புறநகர் மின்சார  ரயில் சேவைகள்  ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பணிக்கு செல்பவர்கள் பள்ளி கல்லூரிகளுக்குசெல்பவர்கள்பெருமளவு பாதிக்கப்படுவார்கள். இவர்களின் நிலையை கருத்தில் கொண்டு நாளை மெட்ரோ ரயில் சேவைகள் அதிக அளவு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தாம்பரம் - சென்னை கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை நிறுத்தம் காரணமாக  இன்று ஒரு நாள் மட்டும், பச்சை மற்றும் நீலம்   வழித்தடங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 


 தாம்பரம் மற்றும் கடற்கரை இடையேயான மின்சார ரயில் சேவை   அக்டோபர் 31  10:18 மணி முதல் 14:45 மணி வரை நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைப்பதற்கும், பயணிகளின் வசதிக்காவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் மெட்ரோ ரயில் சேவைகளை இயக்க திட்டமிட்டுள்ளது. 
விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்துள்ளது. அதேப்போல், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ முதல் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் 11:00 மணி வரை மற்றும் மாலை 05.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.


 அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் முதல்  சென்ட்ரல் மெட்ரோ நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். புரட்சித் தலைவர் டாக்டர்.எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் முதல் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
அதேப்போல்  சென்ட்ரல் மெட்ரோ இயில் நிலையம் முதல் விமான நிலையம் மெட்ரோ வரை கோயம்பேடு வழியாக காலை 08.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.  இந்த கூடுதல் மெட்ரோ இரயில் சேவைகள் நாளை 31.10.2023 ஒரு நாள்மட்டுமே .   சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ இரயில் சேவைகளை பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!