undefined

நடுரோட்டில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு... 2 பேர் கைது!

 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் முதியவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வடக்குத் திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் வேல்சாமி (61). சிட்கோ தொழில்பேட்டையில் உள்ள பால்பண்ணை அருகே நடந்துசென்ற இவரை, 2 பேர் வழிமறித்து கத்தியைக் காட்டி ரூ. 300-ஐ பறித்துச் சென்றனராம்.

இது குறித்து அவர் அளித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, அதே பகுதியில் உள்ள பசும்பொன் நகர் முத்துப்பாண்டி மகன் பாலமுருகன் என்ற டக்கர் முருகன் (38), நடுத் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் ஆறுமுகப்பாண்டி (41) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!