undefined

 காலாண்டு விடுமுறை நீட்டிப்பா? இன்று மாலை வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
 


தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறையை நீட்டிப்பது குறித்து இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு தற்போது காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், இம்மாதம் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை 5 நாட்கள் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தினங்களில் எவ்விதமான சிறப்பு வகுப்புகளையும் நடத்தக்கூடாது என்றும், மாணவர்களை இந்த விடுமுறை தினங்களில் பள்ளிக்கு வரக்கூறி கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இந்த 5 நாட்கள் விடுமுறை தினங்களில் சனி, ஞாயிறு மற்றும் காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை நாட்களை கழித்தால் 2 நாட்கள் மட்டுமே விடுமுறை விடப்பட்டுள்ளதாக மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். ஆசிரியர்கள் தரப்பிலும், விடைத்தாள்கள் திருத்தம், மதிப்பீடு, அலுவலக வேலைகள் என இந்த விடுமுறை நாட்கள் போதுமானதாக இல்லை என்றும், அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமையுடன் முடிவடையும் விடுமுறை நாட்களுடன் அதற்கடுத்த 2 நாட்களான வியாழன், வெள்ளிக்கிழமைகளையும் சேர்த்து விடுமுறையாக அறிவித்தால், அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என்று தேர்வு விடுமுறை 9 நாட்களாகி விடும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், இன்று மாலை காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!