undefined

பாகிஸ்தானில் வெடிவிபத்து... 4 பேர் பலி; 10க்கும் மேற்பட்டோர் காயம்!

 

பாகிஸ்தானின் வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள ரஸ்மாக் பஜாரில் இன்று நடந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.  இந்த வெடிவிபத்தில் 10 பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்ததில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தைய நாள், பலுசிஸ்தானின் கலாட், முசகேல் மற்றும் போலன் மாவட்டங்களில் வெவ்வேறு துப்பாக்கித் தாக்குதல் சம்பவங்களில் மக்கள் மற்றும் லெவிஸ் பணியாளர்கள் உட்பட குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

நேற்று இரவு கலாட் மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 8 பேர் மற்றும் பலுசிஸ்தான் லெவிஸ் பணியாளர்கள் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் உறுதிசெய்துள்ளனர். 

கலாட் மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) தோஸ்டின் தஷ்தியின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், நான்கு லெவிஸ் பணியாளர்கள் மற்றும் மூன்று பேர் அடங்குவர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், "கலாட்டின் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரத்தில் நேற்று இரவு முதல் போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நீடித்தது.

மற்றொரு சம்பவத்தில், கலாட் உதவி ஆணையர் அஃப்தாப் அகமது மற்றும் ஒரு லெவிஸ் நபர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் லெவிஸ் பணியாளர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாக எஸ்எஸ்பி கலாட் கூறினார். காயமடைந்த அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை