பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. ஒருவர் பலி.. 3 பேர் படுகாயம்!
சேலம் மாவட்டம், வீராணம் அருகே உள்ள கோமாளி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் வெள்ளியம்பட்டி பஞ்சாயத்து கட்டுவளவு பகுதியில் உள்ள சீரிக்காடு கரடில் அரசு அனுமதியுடன் பட்டாசு தயாரிப்பு ஆலையும், அதன் அருகே பட்டாசு கொட்டகையும் நடத்தி வருகிறார். இதே பகுதியில் மேலும் ஐந்து சிறிய அளவிலான பட்டாசு குடோன்கள் உள்ளன. நாட்டு வெடி உட்பட அனைத்து வகையான வெடிகளும் இங்கு தயாரிக்கப்படுகின்றன.
மேலும் கார்த்திக், சுரேஷ், முத்துராஜ் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வழியிலேயே ஜெயராமன் இறந்தார். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். தீ விபத்து குறித்து வீராணம் போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே சேலம் துணை போலீஸ் கமிஷனர் பிருந்தா சபா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!