undefined

முன்னாள் டி.ஐ.ஜி விடுதியில் கொடி கட்ட பறந்த பாலியல் தொழில்.. சிக்கிய வெளிநாட்டு பெண்கள்.. அதிர்ச்சி பின்னணி!

 

சென்னை கோயம்பேடு பாரதி அவென்யூ பகுதியில் இயங்கி வரும் விருந்தினர் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் அப்பகுதியில்  நோட்டமிட்ட போலீசார்ர் விருந்தினர்வி டுதிக்குள் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, ​​9 ஆப்பிரிக்க பெண்களையும், 3 ஆண்களையும் போலீசார் பிடித்தனர்.

விசாரணையில் 3 பேரும் லோகாண்டோ ஆப் மூலம் இந்த விருந்தினர் மாளிகைக்கு வந்து வெளிநாட்டு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து கென்யாவைச் சேர்ந்த 4 பெண்கள், 4 தான்சானியா பெண்கள், நைஜீரியப் பெண் உள்பட 9 பேரை போலீஸார் மீட்டனர். உல்லாசமாக இருந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த பாலியல் தொழிலுக்கு தரகர் யார்? வெளிநாட்டு பெண்கள் எந்த விசாவில் சென்னை வந்து தங்கினார்கள்? தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் தங்கியுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் விசாரணை நடத்தியபோது, ​​அது ஓய்வுபெற்ற டிஐஜி ராமச்சந்திரனின் மகன் விக்ரமுக்கு சொந்தமானது என தெரியவந்தது. வெளிநாட்டில் இருப்பதால், தனது நண்பர் அருண் மூலம் நிர்மலா என்ற இலங்கைப் பெண்ணுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு முதல் ரூ. 35,000க்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

இந்த விடுதியை நிர்மலா விபச்சாரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார். சோதனையில், 23 செல்போன்கள், 8 கிராம் எடையுள்ள 5 கஞ்சா பாக்கெட்டுகள், ரூ. 31,000 ரொக்கம், 15 ஹூக்காக்கள், ஒரு கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்தனர். ஆப்பிரிக்க பெண்கள் விபச்சாரத்தில் தள்ளப்பட்டார்களா? அல்லது சட்டவிரோதமாக விசாவில் இங்கு வந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டார்களா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!