undefined

“இந்தி தெரியாதுன்னு சொன்னாலும் கேட்கலை... அவருக்கு 'புரியும்படி' பதில் அனுப்பியிருக்கிறேன்” - திமுக எம்.பி.அப்துல்லா!

 

இந்தி தெரியாது என்று பல முறை கூறியிருக்கிறேன். ஆனாலும் கேட்காமல் எப்போதும் மாண்புமிகு.ரயில்வே இணை அமைச்சர் அவர்களின் அலுவலகத்தில் இருந்து இந்தியில் தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து "எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்" என்று சொல்லியும் மீண்டும் மீண்டும் இந்தியிலேயே கடிதம் வருகிறது. தற்போது அவருக்கு "புரியும்படி" பதில் அனுப்பி உள்ளேன். இனி புரிந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என்று திமுக எம்.பி. அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ரயில்வே வழங்கும் உணவின் தரம் மற்றும் தூய்மை குறித்தும், ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அங்கீகரிக்கப்படாத விற்பனையை நிறுத்துவது குறித்தும் மாநிலங்களவையில் திமுக எம்.பி அப்துல்லா பல்வேறு கேள்விகளை முன்வைத்து பேசியிருந்தார்.

இதற்கு ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங், கடிதம் வாயிலாக திமுக எம்.பி அப்துல்லாவிற்கு பதில் அளித்தார். ஆனால் அது இந்தி மொழியில் இருந்துள்ளது. இந்நிலையில், அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து "எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள்" என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவர்கள் மீண்டும் இந்தியிலேயே கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு ரயில்வே துறை இணை அமைச்சர் ரவ்நீத் சிங்கிற்கு அப்துல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் தாங்கள் எனக்கு அனுப்பிய கடிதம் கிடைக்கப் பெற்றேன். எனக்கு இந்தி மொழி தெரியாத காரணத்தால் அதில் என்ன எழுதியுள்ளீர்கள் என எனக்குத் தெரியவில்லை. எனவே அடுத்த முறை கடிதம் அனுப்பும் போது ஆங்கிலத்தில் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!