undefined

தப்பு.. தப்பு.. இனி மாடுகளை அப்படி சொல்லக் கூடாது.. மாநில அரசு போட்ட திடீர் உத்தரவு!

 

பஜன் லால் சர்மா ராஜஸ்தான் மாநில முதல்வராக உள்ளார். இந்நிலையில் ராஜஸ்தான் அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளை தெரு மாடுகள் என்று சொல்லக்கூடாது. மாறாக ஆதரவற்ற பசுக்கள் என்று சொல்ல வேண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் சட்டசபை கூட்டத்தொடரின் போது கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜோ ரா ராம் குமார் இந்த மாற்றத்தை முன்மொழிந்தார். தற்போது இதற்கான அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. பசுக்கள் மற்றும் காளைகளின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காக பாஜக அரசு பாடுபடுகிறது என்று அமைச்சர் கூறினார்.

பசுக்கள் நலனுக்காக ரூ.250 கோடி ஒதுக்கீட்டில் முதலமைச்சரின் கால்நடை மேம்பாட்டு நிதியம் அமைக்கப்படும். ராஜஸ்தானில் உள்ள பா.ஜ.க அரசு பசுக்களின் நலனுக்காக கணிசமான எதையும் செய்யாமல்,  அவைகளின் நிலைமைகளை மேம்போக்காக பேசுகிறது என எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!