undefined

’அரசு வேலை கன்பார்ம்’.. ரூ.30.5 லட்சம் அபேஸ்.. மாறி மாறி உருட்டிய ஜோதிடர் பெண் கைது..!

 

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரை  ஏமாற்றிய வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் ஜோதிடரை ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் பவானி ஒரிச்சேரிபுதூர் அண்ணாநகரை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பூவழகன் (37). தமிழில் எம்.ஏ படித்துள்ளார்.

கடந்த 2019ம் ஆண்டு கவுந்தப்பாடி சலங்கபாளையம் அய்யங்காடு காரிய குப்பன் முதலி வீதியை சேர்ந்த ஜோதிடர்கள் அன்பானந்தன் (53), இவரது மனைவி கோகிலாம்பாள் (52) ஆகியோர் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5.50 லட்சம் பெற்றனர். ஆனால் அரசு வேலை வழங்கவில்லை. அதேபோல், அரசு வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி ஈரோட்டைச் சேர்ந்த மலர்க்கொடி என்பவரிடம் ரூ.5 லட்சமும், செம்பூத்தம்பாளையத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவரிடம் ரூ.20 லட்சமும் பெற்றுக்கொண்டு அன்பானந்தன் , கோகிலாம்பாள் ஆகியோர் ஏமாற்றியுள்ளனர்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, ​​தன்னிடம் ஜோதிடம் கேட்க வந்தவர்களிடம் அன்பானந்தன் , ஜாதகத்தில் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும், கடினமாக முயற்சி செய்தால் அந்த வேலை கிடைக்கும் என்றும் கூறினார்.

மேலும் அன்பானந்தன் , கோகிலாம்பாள் இருவரும் ஜோதிடம் பார்க்க வந்தவர்களிடம், "பல ஆண்டுகளாக ஜோதிடம் செய்து வருவதால் எங்களுக்கு அரசு அதிகாரிகள், அரசியல் பிரமுகர்களை நன்றாக தெரியும். பணம் கொடுத்தால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும்' என கூறினர்.அன்பானந்தனின் மகளான ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தற்காலிக பெண் செவிலியராக பணியாற்றும் பவித்ரா (27), எனது அப்பாவும், அம்மாவும் பணம் கொடுத்துதான் எனக்கு அரசு செவிலியராக பணி வாங்கி தந்ததாக ஜாதகம் பார்க்க வந்தவர்களிடம் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்வாறு கூட்டுச் சதியில் ஈடுபட்டு ரூ. 3 பேரிடம் இருந்து 30.50 லட்சம் ரூபாய் பெற்று ஏமாற்றினர். பவித்ராவின் வேலை குறித்து போலீசார் விசாரித்ததில், அவர் அரசு பணியில் சேர்ந்தது தெரிந்தது. கொரோனா காலத்தில் தற்காலிக அடிப்படையில் செவிலியராக சேர்ந்துள்ளார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி, மோசடிக்கு உடந்தையாக இருந்த அபர்மந்தன், அன்பானந்தன் மகள் பவித்ரா ஆகியோரை கடந்த ஜனவரி 12ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய அன்பானந்தனின் மனைவி ஜோதிடர் கோகிலாம்பாள் கடந்த 3 மாதங்களாக தலைமறைவாக இருந்து நிலையில் அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்